← முகப்புபுதுக்கோட்டை →

அருள் விக்னேஷை கைது செய்வதில் எனக்கு உடன்பாடில்லை! - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி கார்த்திக் சிதம்பரம், சமீபத்திய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ சர்ச்சை, மதுரை தீபத்தூண் விவகாரம் உள்ளிட்டவை குறித்த தன்னுடைய கருத்துகளை செய்தியாளர்களிடையே பகிர்ந்துக் கொண்டார்.

அருள் விக்னேஷை கைது செய்வதில் எனக்கு உடன்பாடில்லை! - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

அதில் அவர் பேசியதாவது, ”வாடிக்கையாக கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பிரதாயங்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நடந்துள்ளது. புதிய சம்பிரதாயங்களை திணிப்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. இதுதான் தமிழக அரசாங்கத்தில் நிலை. இந்த அரசாங்கத்தின் நிலை மட்டுமல்ல கடந்த அரசாங்கத்தின் நிலையும் இதுதான். அந்த நிலை தொடர்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகத்தில் அவரவர் மத நடைமுறைகளை பின்பற்றுவதில் யாருக்கு எந்த தடையும் இல்லை. இந்த விவகாரத்தில் வடநாட்டைச் சார்ந்தவர்கள் புரிதலே இல்லாமல், தமிழகத்தில் ஏதோ மத கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கு தடை உள்ளது என நினைப்பது தவறு. இதில் அவமதிப்பு இருந்தால் அது குறித்து ஏன் அவமதிப்பு ஆனது என்று சொல்வதற்கும் தமிழக அரசுக்கு உரிமை உண்டு.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக் தாகூருக்கான பேச்சாளர் நான் அல்ல. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் அவரது கருத்திற்கு அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார், அவர் ஒரு படித்த அதிகாரி. அந்த புகாரை சட்டப்படி விசாரித்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் ஏன் காலதாமதமாக புகார் அளித்தார் என்பதை அவரிடமும் கேட்க வேண்டும். இந்த செய்தி கசியும்போதே அரசும் சம்பந்தப்பட்ட கட்சியும் முறையான நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனைக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். அந்த கட்சிக்கு பெரிய அனுபவம் கிடையாது. இப்போதுதான் அவர்கள் சவாலை சந்திக்கின்றனர் அதனால் எப்படி இந்த பிரச்சனையை கையாள்வது என்று அவர்களுக்கு தெரியாமல் போனது. இனிமேல் அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

அதேபோல் அரசின் முதன்மைச் செயலாளரும் இதை முன்கூட்டியே விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசாங்கம் ஒன்றும் சட்டம் ஒழுங்கை கையாள்வதில்லை, அதே வேளையில் சட்டம் குறித்த சீர்திருத்தம் தேவை. சமுதாயம் அப்படி உள்ளது அதனை பாதுகாக்க வேண்டியது என்பது காவல்துறையின் கடமை. ஒரு பாதுகாப்புக்காக சிலர் ஆளுங்கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்வது வாடிக்கை,அவர்களைப் பற்றி விசாரித்து கட்சியில் சேர்க்க வேண்டியது அந்தந்த கட்சியின் பொறுப்பு. தவெக கட்சிக்கு அட்வைஸ் கொடுக்க நான் ஒன்றும் அவர்கள் அட்வைஸர் அல்ல” என்று கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், ”எல்லா விஷயத்துக்கும் கைது பண்ண வேண்டும் என்பதை எனக்கு உடன்பாடு இல்லை. தொட்டதற்கெல்லாம் கைது என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. நமது சட்ட நடைமுறைகளில் தேவையில்லாமல் கைது நடைபெறுகிறது. சாட்சியைக் கலைப்பார்கள்,இன்னொருத்தர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றால் மட்டுமே கைது செய்ய வேண்டும். எல்லா வழக்கிலும் எல்லோரையும் கைது செய்ய வேண்டும் என்பது தேவையில்லாத ஒன்று.

தவெக புதிய கட்சி,அந்தக் கட்சிக்கான கட்டமைப்பு மற்றும் மெக்கானிசம் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்,அதேவேளையில் அவர்கள் அட்ரஸ் செய்ய வேண்டும். செய்தால் அந்த கட்சிக்கு நல்லது, ஆனால் எப்படி பண்ண வேண்டும் என்று நான் அட்வைஸ் செய்ய முடியாது” என்று பேட்டி அளித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !