← முகப்பு

பசங்க படிக்கிற புத்தகத்துல ஊழல் பண்ணிய திமுக? – முதல்வர் விஜய் ஆவேசம்!

இன்று மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், சமீபத்தில் கல்வித்துறையில் நடந்த ஊழல்கள் குறித்து மாணவர்களிடையே பேசியுள்ளார்.

பசங்க படிக்கிற புத்தகத்துல ஊழல் பண்ணிய திமுக? – முதல்வர் விஜய் ஆவேசம்!

ஆண்டுதோறும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொகுதி வாரியாக பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தவெக தலைவர் விஜய், முதல்வராக மாணவர்களுக்கு முதல்முறையாக விருதுகளை வழங்குகிறார்.

முதற்கட்டமாக கடந்த 4ம் தேதி சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று மற்றும் நாளை இரு தினங்களுக்கு இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட விருது அளிக்கும் நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள கன்வென்சன் செண்டரில் நடைபெறுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

vijay
vijay

இன்று நடைபெறும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு பேசிய முதலமைச்சர் விஜய் ”சமீபமாக நடந்த ஒரு ஊழல் குறித்து என் மாணவ கண்மணிகளிடம் நான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அது மாணவர்களாகிய உங்களின் எதிர்காலம் தொடர்புடையது. கல்வித்துறையில் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதில் ஊழல் செய்துள்ளனர். முன்னதாக நான் சட்டமன்றத்தில் எனது மேசையில் மூன்று ஊழல் கோப்புகள் உள்ளன என்று சொன்னபோது, எதிர்கட்சியை சேர்ந்த சிலர் ’திறங்களேன்.. திறந்துதான் பாருங்களேன்’ என்று பேசினார்கள். தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளால் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு உள்ளார்கள்.

ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அதை வைத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால், அந்த ஏஐ வைத்தும் ஊழல்தான் செய்துள்ளார்கள். சமீபத்தில் திறக்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலகத்தில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதை தொடர்ந்து திருச்சி, மதுரை, தென்காசி என பல மாவட்ட நூலகங்களில் இந்த போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நூலகங்கள் எதற்காக உள்ளன? மாணவர்களாகிய நீங்கள் படித்துப் பயன் பெறுவதற்காக உள்ளன. அவற்றில் புத்தகத்தை வைத்து ஊழல் செய்த இவர்களை எப்படி பொறுத்துக் கொள்வது. மாணவ கண்மணிகளே உங்களுக்காக நான் இருக்கிறேன்” என பேசியுள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !