← முகப்பு

டிரம்ப்பைக் கொல்லச் சதி: பாகிஸ்தான் நபருக்கு 27 ஆண்டுகள் சிறை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய அரசுப் பதவிகளில் இருப்பவர்களைக் கொலை செய்யச் சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் மெர்ச்சன்ட்டுக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்ப்பைக் கொல்லச் சதி: பாகிஸ்தான் நபருக்கு 27 ஆண்டுகள் சிறை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்யச் சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் மெர்ச்சன்ட் என்பவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 48 வயதான ஆசிப் மெர்ச்சன்ட், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினரின் தூண்டுதலின் பேரில் இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கத் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பான வழக்கு நியூயார்க்கின் புரூக்ளின் நகரில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி எரிக் ஆர்.கோமிதீ, மெர்ச்சன்ட்டுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். கூலிப்படையினரைப் பணியமர்த்தி படுகொலைத் திட்டத்தைச் செயல்படுத்த மெர்ச்சன்ட் முயற்சி செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தண்டனை விவரங்களை அமெரிக்க அரசு வழக்கறிஞர் டாட் பிளாஞ்ச் வெளியிட்டுள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மெர்ச்சன்ட் தாமாக முன்வந்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையில் இணைந்து, உளவுப் பிரிவு தொடர்பான பயிற்சிகளைப் பெற்றதாகவும், பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று தாக்குதலுக்கான இடங்களைத் தேர்வு செய்ததுடன் கூலிப்படையினரை ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக டிரம்ப்பை முக்கிய இலக்காகக் கொண்டிருந்த அவர், அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே ஆகியோரையும் குறிவைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் முன்னாள் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்கும் நோக்கில் ஈரான் தரப்பில் இந்தப் படுகொலைத் திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !