← முகப்பு

மனிதர்கள் பயணித்த முதல் மின்சார விமானம்! – சீனா படைத்த சாதனை!

சீன அரசின் சொந்த விமானத் தயாரிப்பு நிறுவனம் மின்சார விமானம் ஒன்றை உருவாக்கி அதில் மனிதர்களை பயணிக்கச் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

மனிதர்கள் பயணித்த முதல் மின்சார விமானம்! – சீனா படைத்த சாதனை!

உலகம் முழுவதும் கச்சா எண்ணெயிலிருந்து எடுக்கக்கூடிய எரிப்பொருட்களில் இருந்தே வாகனங்கள் தொடங்கி விமானம் வரை இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நாளடைவில் இந்த எரிப்பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதாலும், எரிப்பொருட்களால் ஏற்படும் மாசு உள்ளிட்ட காரணங்களாலும் உலகளவில் மாற்று சக்திக்கு மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இருச்சக்கர, நான்கு சக்கர வாகனங்களை மின்சாரத்தின் மூலமாக இயக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று பல நாடுகளில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதுபோல விமானத்தை மின்சாரத்தின் மூலம் இயக்குவது குறித்த பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அப்படியாக சீனா அரசின் விமானத் தயாரிப்பு நிறுவனமான ’கோமாக்’, ஷாங்காயில் உள்ள ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் மற்றும் சி.ஏ.டி.எல் பேட்டரி நிறுவனத்துடன் இணைந்து மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

முதல் முயற்சியாக CE-25A என்னும் 19 பயணிகள் பயணிக்கக் கூடிய சிறிய ரக விமானத்தை தயாரித்துள்ளனர். மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த விமானம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ தூரம் பயணிக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த விமானத் தயாரிப்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் முதற்கட்டமாக மனிதர்களை ஏற்றிச் செல்லும் முன்னர், தானியங்கி முறையில் பறக்கவிடப்பட்டு 19 முறை சோதனை செய்யப்பட்டது.

அனைத்து முயற்சிகளும் வெற்றியடைந்த நிலையில், அடுத்த கட்டமாக மனிதர்களுடன் விமானத்தை இயக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி கடந்த சனிக்கிழமை 2 விமானிகள் மற்றும் ஒரு விமான பொறியாளருடன் இந்த விமானம் இயக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சோதனையில் இந்த விமானம் 3 பயணிகளுடன் 16 நிமிடங்களில் 60 கி.மீ தூரத்தை கடந்து பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. மின்சார விமான தயாரிப்பில் இது ஒரு வெற்றிகரமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

மேலும் சோதனைகளை விரிவுப்படுத்தி விரைவில் மின்சார விமானம் பயணிகளை தாங்கிக் கொண்டு பறந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !