← முகப்பு

நாளை வானத்தை நோக்கி டார்ச் அடிக்க சொன்ன ’NASA’- எதற்காக தெரியுமா?

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ’நாசா’ நாளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் வானத்தை நோக்கி டார்ச் அடிக்குமாறு கூறியுள்ள செய்து வைரலாகியுள்ளது. நாசா எதற்காக அப்படி சொன்னது என பார்ப்போம்.

நாளை வானத்தை நோக்கி டார்ச் அடிக்க சொன்ன ’NASA’- எதற்காக தெரியுமா?

இப்பிரபஞ்சத்தில் தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்பின்படி, அனைத்தையும் விட அதிவேகமாக பயணிக்கக்கூடிய விஷயம் ஒளி மட்டும்தான். சூரியனுக்கும் பூமிக்கும் 149.6 மில்லியன் கிலோமீட்டர்கள் இடைவெளி இருந்தாலும், சூரிய ஒளி பூமியை அடைய எடுத்துக் கொள்ளும் காலம் 8 நிமிடங்கள்தான். அவ்வளவு வேகமாக பிரபஞ்சம் முழுவதும் பயணிக்கும் ஒளியானது 24 மணி நேரத்தில் 26 பில்லியன் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிக்கிறது.

பூமிக்கு சொந்தமான எந்த பொருளும் இந்த 26 பில்லியன் கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் கிடையாது. ஒன்றே ஒன்றைத் தவிர. அதுதான் நாசா 1977ல் அனுப்பிய வாயேஜர்-1 என்னும் செயற்கைக்கோள். சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த வாயேஜர்-1 யுரேனஸ், ப்ளூட்டோ உள்ளிட்ட கோள்களையும் தாண்டி சூரிய குடும்பத்தின் எல்லையாக அறியப்படும் Interstellar Spaceக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

நாசாவின் கணிப்புப்படி நவம்பர் 18ம் தேதி வாயேஜர்-1 விண்கலமானது முழுதாக ஒரு ஒளி நாள், அதாவது பூமியிலிருந்து 26 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவை அடைய உள்ளது. பூமியிலிருந்து அனுப்பும் சிக்னல்களை வாயேஜர் பெற ஒரு நாளும், வாயேஜர் அனுப்பும் தகவல்களை பூமியிலிருந்து பெற ஒரு நாளும் என ஒரு கம்யூனிகேஷனுக்கு 48 மணி நேரங்கள் தேவைப்படும்.

பூமியிலிருந்து வாயேஜர்-1 இவ்வளவு தொலைவை அடைந்துள்ளதை கொண்டாடும் விதமாக நாளை உலக மக்கள் வானத்தை நோக்கி டார்ச் ஒளி வீசும்படி நாசா கேட்டுக் கொண்டுள்ளது. பூமியிலிருந்து புறப்படும் இந்த ஒளிக்கதிர்கள் சரியாக 18ம் தேதி வாயேஜர்-1 தனது ஒரு ஒளி நாளை கடக்கும்போது அதை உற்சாகப்படுத்தும் விதமாக அதை சென்றடையும் என்கின்றனர் வானியலாளர்கள்.

மேலும் வாயேஜர்-1ன் இந்த பிரம்மிக்கத்தக்க பயண சாதனையை கொண்டாடும்படியாக மோர்ஸ் கோடில் V-Y-G என்ற கோடையும் ஒலி வடிவில் சமிக்ஞை செய்ய நாசா விஞ்ஞானிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

வாயேஜர்-1 மேற்கொண்ட பயணத்தில் சனி, வியாழன், நெப்டியூன், யுரேனஸ் உள்ளிட்ட பல கோள்களின் மாதிரி படங்களை மிக அருகில் படமாக்கி பூமிக்கு அனுப்பியது. அதன்மூலம் சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களின் தன்மை குறித்தும் விஞ்ஞானிகளால் அறிந்துக் கொள்ள முடிந்தது. தற்போது 26 பில்லியன் கி,மீ தொலைவையும் தாண்டி அண்டவெளியில் தனது பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது வாயேஜர்-1.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !