நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், T20, டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.
ஏற்கெனவே ஒருநாள் மற்றும் T20 தொடர்களை கைப்பற்றிய இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.
Buy Now ! Pay Daily !
வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வலுவாக இருந்தபோதிலும், நியூசிலாந்து பேட்டர்களின் நிலைத்த ஆட்டத்தால் மேட்ச் டிராவானது.
இந்நிலையில் இரண்டாவது போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே சிறப்பான தொட்க்கத்தை தந்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய பவுலர்களின் ஆதிக்கம்
முதல் விக்கெட்டுக்கான தேடலில் இருந்த இந்திய அணிக்கு, ஆகாஷ் தீப் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் டாம் லேதம் (59) மற்றும் ரச்சின் ரவீந்திரா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
பின்னர் அன்ஷுல் கம்போஜ் பந்து வீச்சில் ஹென்றி நிக்கோல்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் டேரி மிட்சல் மற்றும் டாம் பிளண்டல் ஜோடி இணைந்து 5வது விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்த்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் மிட்சல் (31) ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இணைந்த டாம் பிளண்டல் மற்றும் பிலிப்ஸ் ஜோடி ஆட்டமிழக்காமல் 62 ரன்களை சேர்த்தனர்.
நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை எடுத்துள்ளது. பிளண்டல் 53 ரன்கள், பிலிப்ஸ் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.






