ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பையில், ஆசிய நாடுகளின் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கும், 'ஏ' அணிகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரில், 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள திலக் வர்மா தலைமையிலான இந்தியா 'ஏ' அணி, அரையிறுதியில் இலங்கை ஏ அணியை எதிர்கொண்டது.
Buy Now ! Pay Daily !
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் திலக் வர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு வைபவ் சூர்ய வன்ஷியும் அபிஷேக் சர்மாவும் சிறப்பான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர்.
ஜனித லியனாகே வீசிய 8வது ஓவரில் வரிசையாக சிக்சர் பவுண்டரி என வைபவ் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அதே ஓவெரில் அவுட்டானர்.
இந்நிலையில் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்களை சேர்த்த நிலையில், நிலைத்து ஆடிய அபிஷேக் 78 ரன்களில் அவுட்டானார்.
அடுத்ததாக இறங்கிய குஷாக்ரா 21 ரன்களில் வெளியேற, மறுமுனையில் கேப்டன் திலக் வர்மா நிலைத்து நின்று அரைசதம் கடந்தார்.
அதன்பின் களமிறங்கிய ரிங்கு சிங், சூர்யான்ஷ் ஆகியோர் சொர்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, ஷாபாஸ் அகமது அதிரடியாக ஆடி, 45 பந்தில் அரைசதம் கடந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களை குவித்தது.
இந்நிலையில், 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கிய இலங்கை அணிக்கு சினேத ஜெயவர்தனா மற்றும் லசித் ஜோடி நல்ல துவக்கத்தை தந்தனர்.
இந்தியாவின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டு பவுண்டரிகளை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் முதல் விக்கெட்டுக்கு 174 ரன்களை சேர்த்தனர்.
ஷாபாஸ் அகமது வீசிய ஓவரில் சதமடித்த சினேத் அவுட்டாக, மறுமுனையில் 116 ரன்களில் இருந்த லசித்தும் அவுட்டானார்.
பின்னர் இணைந்த நிஷான் மதுஷ்கா, கேப்டன் பவன் ரத்னாயகே ஜோடி அபாரமாக ஆடியது. வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி, 41.3 ஓவர்களிலேயே இலைக்கை அடைந்து எளிதாக வெற்றி பெற்றது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் மதுஷ்கா 58 ரன்களும், பவன் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மேலும் இதே மைதானத்தில் இன்று நடக்கும் 2வது அரையிறுதியில் பாகிஸ்தான் ஏ- வங்காள தேசம் ஏ அணிகள் மோதுகின்றன. இந்த தோல்வியின் மூலம் இந்திய ஏ அணி தனது பைனலுக்கான வாய்ப்பை இழந்தது.






