← முகப்பு

அணு ஆயுதங்களை அதிகப்படுத்துங்கள்! – கிம் எடுத்த திடீர் முடிவு!

சமீபத்தில் சீனாவில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், அணு ஆயுத தயாரிப்பை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அணு ஆயுதங்களை அதிகப்படுத்துங்கள்! – கிம் எடுத்த திடீர் முடிவு!

வடகொரிய அதிபராக இருந்து வரும் கிம் ஜாங் அன், தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதுடன், அணு ஆயுத தயாரிப்பையும் தொடர்ந்து வருகிறார். அவ்வப்போது கொரிய கடற்பகுதியில் வடகொரிய ராணுவம் நடத்தும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

வடகொரியா அணு ஆயுத தயாரிப்பை கைவிட வேண்டும் என எச்சரித்து வரும் அமெரிக்கா, பொருளாதார தடை உள்ளிட்டவற்றையும் வடகொரியா மீது விதித்தது. ஆனால் எதற்கு வளைந்துக் கொடுக்காமல் விடாபிடியாக ஆயுதங்களை தயாரித்து வருகிறது வடகொரியா. மேலும் வடகொரியாவிற்கு சீனா, ரஷ்யா நாடுகளோடு நல்ல உறவு நிலை தொடர்ந்து வருவதால் சர்வதேச அரசியல்ரீதியாகவும் வடகொரியாவை அமெரிக்காவால் கைக்குள் கொண்டு வர முடியாத சூழல் உள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்நிலையில் சமீபத்தில் சீனாவில் நடந்த உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜீ ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உள்ளிட்ட பல நாட்டு அதிபர்களும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் ட்ரம்ப், புதின், ஜின்பிங் ஆகியோர் ஒன்றாக கலந்துக் கொண்ட சம்பவம் வைரலானது. ஆனால் அதில் கிம் இடம்பெறவில்லை. மேலும் அவரை சந்திக்க ட்ரம்ப் அனுமதி கேட்டதாகவும் அதை கிம் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதை ட்ரம்ப் மறுத்துள்ளார். இருவருமே பிஸியாக இருந்ததால் சந்திக்க இயலவில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.

இப்படியான முரண்பாடுகள் ஒருபக்கம் இருக்க சீன மாநாட்டை முடித்துக் கொண்டு வடகொரிய திரும்பிய கிம் ஜாங் அன், தனது நாட்டின் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க உடனடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். சீன மாநாட்டில் என்ன நடந்தது? ஏன் அவர் இந்த திடீர் உத்தரவுகளை பிறப்பித்தார் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் கிம்மின் இந்த நடவடிக்கை உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !