← முகப்புவிழுப்புரம் →

இறப்பிலும் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த கடலூர் இளைஞர்!

வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த கடலூர் மாவட்ட இளைஞரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய அவரது குடும்பத்தினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

இறப்பிலும் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த கடலூர் இளைஞர்!

கடலூர் மாவட்டம் புதுப்பாளையம், எண்.1 சுப்பிரமணிய கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் பெயிண்டராகப் பணியாற்றி வந்தார். கடந்த 16ஆம் தேதி வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் அவரது தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டு, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக 17ஆம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மணிகண்டனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது தாயார் உமா மற்றும் உறவினர்கள், மணிகண்டனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மணிகண்டனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இரண்டு கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்த மணிகண்டனின் குடும்பத்தினரின் மனிதநேயச் செயலைப் பாராட்டும் வகையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உள்ளிட்ட மருத்துவர்கள், மணிகண்டனின் உடலுக்கு மாலை அணிவித்து சல்யூட் அடித்து வீர வணக்கம் செலுத்தினர்.

பின்னர் அரசு அமரர் ஊர்தி மூலம் அவரது உடல் சொந்த ஊரான கடலூர் புதுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.துயரமான சூழலிலும் தங்களது மகனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கி பல உயிர்களைக் காப்பாற்ற முன்வந்த குடும்பத்தினரின் செயலைக் கண்டு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !