← முகப்புவிழுப்புரம் →

செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் என்ன நடக்கிறது? – பின்னணியும், விசாரணைச் சிக்கல்களும்!

செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போய் 41 நாட்களாகியும் தடயம் கிடைக்காத நிலையில், சிபிசிஐடி போலீசார் 31-வது நாளாக விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் என்ன நடக்கிறது? – பின்னணியும், விசாரணைச் சிக்கல்களும்!

சம்பவத்தின் பின்னணி

செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்மமான முறையில் காணாமல் போனார். இது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். சிறுமி குறித்து எந்தத் துப்பும் கிடைக்காததால், இந்த வழக்கு சிபிசிஐடி (CBCID) பிரிவுக்கு மாற்றப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை

சிறுமி மாயமாகி 41 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் இன்று 31-வது நாளாகப் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஆலம்பூண்டி பகுதியில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான தனிப்படை போலீசார், சிறுமியின் எதிர்வீட்டில் வசிக்கும் மஞ்சுளா, அவரது மருமகள் மகேஸ்வரி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரின் மனைவி பவானி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். சிறுமி பயின்ற பள்ளியில் வைத்து இவர்களிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சரித்திரப் பதிவேடு குற்றவாளியிடம் கிடுக்கிப்பிடி மற்றொருபுறம், அப்பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரை என்பவரை ரகசிய இடத்தில் வைத்து, சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 பேரின் செல்போன்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் ஆய்வு மேலும், இந்த வழக்கில் தொழில்நுட்ப ரீதியிலான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் என மொத்தம் 8 பேரின் செல்போன்களைக் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் கைப்பற்றிச் சென்றனர்.

அந்த செல்போன்களின் அழைப்பு விவரங்கள் (Call Details) மற்றும் தொடர்புடையவர்களின் வங்கி ஆவணங்களைத் தொடர்ந்து 10-வது நாளாகப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். 41 நாட்களாகியும் சிறுமி குறித்த எந்தத் தடயமும் கிடைக்காததால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வரும் சூழலில், விரைவில் இந்த வழக்கில் முக்கியத் துப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !