விழுப்புரம் மாவட்டம்,
திருவெண்ணைநல்லூர் அடுத்த ஏனாதிமங்கலம் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியின் அருகில் பாழடைந்த பயணிகள் நிழற்குடை பல முறை கோரிக்கை வைத்து ஊரக வளர்ச்சித் துறையினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
Buy Now ! Pay Daily !
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய நிழற்குடை கட்டிடம் கட்டித் தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளர் ஏனாதிமங்கலம் மாயகிருஷ்ணன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
கோரிக்கை மனு கொடுத்து ஒன்றரை வருடம் கடந்த நிலையில் இன்றளவும் நிழற்குடை கட்டுவதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சூழ்ச்சியால் இப்பகுதியில் நிழற்குடை கட்டாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும் ஏனாதிமங்கலம் ஆதிதிராவிடர் மக்களுக்கு நிழற்குடை அமைத்துக் கொடுக்க அலுவலர்கள் மெத்தனமாகவே இருந்து வருகின்றனர்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டும் அதே இடத்தில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டிடம் கட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.
இனியும் தாமதம் ஏற்பட்டால்மக்களை திரட்டி வீதியில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.



