இதன் ஒரு பகுதியாக இன்று காலை புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல்துறையினர் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.
தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஐஜி சத்தியசுந்தரம் முன்னிலையில் காவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் கடத்தலைத் தடுப்பதிலும், இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் பாதுகாப்பதிலும் காவல்துறையின் பங்களிப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
Buy Now ! Pay Daily !
மேலும், போதைப் பொருட்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. 2029-ஆம் ஆண்டுக்குள் போதை இல்லா இந்தியாவை உருவாக்கும் தேசிய இலக்கிற்கு ஆதரவாக, புதுச்சேரி காவல்துறையின் இந்த முயற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.






