← முகப்பு

நான் ஏன் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கிறேன்? – விளக்கமளித்த மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தில் அமல்படுத்தவுள்ள புதிய தொகுதி மறுவரையறைக்கான மசோதாவை ஆதரிப்பதாக திமுக கூறியதன் காரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

நான் ஏன் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கிறேன்? – விளக்கமளித்த மு.க.ஸ்டாலின்!

மத்திய அரசு இந்திய மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப தொகுதிகளை அதிகப்படுத்துவதற்கான தொகுதி மறுவரையறை சட்டமுன் வரைவை அறிமுகப்படுத்திய நிலையில் அதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதல்வர்களோடு தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனை கூட்டத்தையும் அப்போதைய முதல்வரான மு.க.ஸ்டாலின் நடத்தினார்.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு முந்தைய சட்ட முன்வரைவில் திருத்தங்கள் மேற்கொண்டு மீண்டும் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர உள்ளது. இதுகுறித்து இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில், தற்போதைய மசோதா மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்காத விதத்திலும், ஜனநாயகத் தன்மையோடும் உள்ளதால் ஆதரிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திமுகவின் இந்த முடிவை திமுகவுடன் கூட்டணியிலுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக் கட்சி உள்ளிட்ட கட்சி தலைவர்களும் ஏற்றுக் கொண்டு தொகுதி மறுவரையறைக்கான தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மு.க.ஸ்டாலின் விளக்கம்

ஆனால் திமுகவின் இந்த நிலைபாடு குறித்த விமர்சனங்களும் எழுந்துள்ளது. திமுக – பாஜகவுடன் இணக்கமாக செல்லத் தொடங்கிவிட்டதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இந்நிலையில் தங்களது நிலைபாடு குறித்து பேசியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக தொகுதி மறுவரையறை சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.

இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!

1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த தொகுதி மறுவரையறையைத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே தொகுதி மறுவரையறையை நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !