← முகப்பு

பாஜக வலையில சிக்கிடாதீங்க ஸ்டாலின்!? – தோழமை கட்சிகள் எச்சரிக்கை!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுகவின் இந்த முடிவுக் குறித்து கம்யூனிஸ்ட், தி.க உள்ளிட்ட தோழமை அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

பாஜக வலையில சிக்கிடாதீங்க ஸ்டாலின்!? – தோழமை கட்சிகள் எச்சரிக்கை!

மத்திய அரசு முன்மொழிந்த தொகுதி மறுவரையறை மசோதாவை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வந்த நிலையில், தற்போது அந்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ளது. இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்திற்கு 50 சதவீதம் தொகுதிகள் அதிகரிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் ஏற்புடையதாக பட்டதால் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

CPM சண்முகம் அதிருப்தி

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், திமுகவின் இந்த முடிவிற்கு கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் உள்ளிட்ட திமுகவின் தோழமை அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. திமுகவின் தொகுதி மறுவரையறை ஆதரவு குறித்து பேசிய சிபிஎம் சண்முகம் ”தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று சொன்னார்கள். இப்போது எதன் அடிப்படையில் பாஜகவின் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளார்கள் என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு திமுகவிற்கு உள்ளது.

இந்த மசோதாவால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறையாது என திமுக சொல்கிறது. அப்படி குறையாது என்பதற்கு பாஜக சார்பில் திமுகவிற்கு என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விளக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

கி.வீரமணி வருத்தம்

அதுபோல திமுகவின் இந்த முடிவு குறித்து வருத்தத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ” 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன் திட்டமிட்டே கொண்டு வந்த தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றவிடாமல், மாநிலங்களின் குறிப்பாக தென் மாநிலங்களின் உரிமையைப் பறித்து, குரலற்றவர்களாக்கும் சூழ்ச்சி வியூகம் அமைத்ததைத் தோற்கடித்தப் பெருமை திமுகவின் வரலாற்றுப் பெருமையாகி, இந்தியா முழுவதும் பரவி, வரலாறு படைத்தது.

தற்போது ஏதோ ‘திமுக. அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, புதிய சில மாய்மால ஜாலத் திட்டங்கள் சதவிகித கணக்குக் காட்டி வஞ்சிக்கும், தேன் கலந்த விஷ உருண்டையை ஏற்றுவிட்டது. சமரசம் செய்துகொண்டது’ என்ற பரவலானப் பிரச்சாரம், ஊடகம், சமூக வலைதளங்கள், திமுகவை அழிக்க விரும்பும் அரசியல் கட்சிகளிடையே வெகுவேகமாகப் பரவி வருவது குறித்து, திராவிடர் கழகம் பெரிதும் கவலை கொள்கிறது.

எனவே, முந்தைய சட்டமன்றத் தீர்மானம், தொகுதி மறுவரையறை பற்றி 25 ஆண்டுகளுக்கு தற்போதைய முறையே தொடரும் என்பதில் உறுதியுடன் இருக்கவேண்டும். கர்நாடகா, ஆந்திரா, கேரளா எல்லாம் என்ன நிலைப்பாடோ அதுதான் நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும். தென்மாநிலங்களை பாதிக்கும் வகையில், எந்த முயற்சிக்கும் இடம் தரக்கூடாது. இந்திய அளவில் நமது குரல் நசுக்கப்படக் கூடாது.

அதிக இடங்கள், விகிதாச்சாரக் கணக்கு என்ற பாஜக பொறியில் திமுக சிக்கிவிட்டால், அது திமுகவை வீழ்த்திடத் துடிக்கும் இன, அரசியல் எதிரிகளுக்குச் சரியான வாய்ப்புத் தந்ததாக ஆகிவிடக் கூடும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு தற்போது உள்ள சூழலில் திமுகவின் இந்த முடிவு, வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்தது போல ஆகிவிடக்கூடாது என்ற கவலையினால் இதை அவசர வேண்டுகோளாக திமுகவுக்கு விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !