அரசியல்தொகுதி மறுவரையறை திமுக நிலைப்பாட்டில் மாற்றமா? ஸ்டாலின் விளக்கம்!
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் புதிய திட்டம் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கலாம் என்ற அச்சம் ஒருபுறம் இருக்க, மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே திமுகவின் நிலைப்பாடு குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ள பதில், நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள சிறப்புக் கூட்டத்தொடர் மற்றும் இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்.