← முகப்புசிவகங்கை →

Indiavaani செய்தி எதிரொலி: மானாமதுரை பள்ளியில் முட்புதர்கள் அகற்றம்

மானாமதுரை அருகே முட்புதர்கள் மற்றும் செடி, கொடிகள் சூழ்ந்து காணப்பட்ட பறையன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்போது தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதர்கள் அகற்றப்பட்டுள்ளன.

Indiavaani செய்தி எதிரொலி: மானாமதுரை பள்ளியில் முட்புதர்கள் அகற்றம்

மானாமதுரை அருகே சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பறையன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் முட்புதர்கள் மற்றும் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. பள்ளிக் கட்டிடத்தின் சுவர்களிலும் செடி, கொடிகள் படர்ந்து காணப்பட்டதுடன், வகுப்பறைகளின் பின்புறம் புதர்கள் சூழ்ந்திருந்தன. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாடும் அபாயம் இருப்பதாகக் கூறி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து பள்ளியின் அவலநிலை தொடர்பாக இந்தியாவாணியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவின் பேரில் பள்ளி வளாகத்தைச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அதன்படி, தற்போது பள்ளி வளாகத்தில் வளர்ந்திருந்த முட்புதர்கள் மற்றும் தேவையற்ற செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் முன்பு புதர்கள் சூழ்ந்து காணப்பட்ட பள்ளி வளாகம் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.

செய்தி வெளியானதைத் தொடர்ந்து அமைச்சரின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் பாதுகாப்பையும், பள்ளியின் சுகாதாரத்தையும் உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தைத் தொடர்ந்து தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !