90S கிட்ஸின் கேம்:
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏராளமான கேம்கள் உருவாகி வந்தாலும், மக்களிடையே ட்ரெண்ட் செட்டராக பரிணமிக்கும் கேம்கள் மிகக்குறைவே. அவற்றில் மிக முக்கியமான ஒன்று GTA எனப்படும் Grand Theft Auto. 1997m ஆண்டிலே 2டி வெக்டார் பிட் கேமாக வெளியான GTA அப்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஓரளவு பிரபலமாக அறியப்பட்டது. ஆனால் GTAவை உலகளாவிய பிரபலமடைய செய்தது GTA Vice City மற்றும் San Andreas வெர்சன்கள்தான். 2002ம் ஆண்டிலே வெளியான வைஸ் சிட்டி வெர்சன் உலக பிரபலமானது. இந்தியாவில் பல ப்ரவுசிங் செண்டர்களிலும், கேம் செண்டர்களிலும் சிறுவர்கள், இளைஞர்கள் ஜிடிஏ வைஸ் சிட்டி விளையாடுவதற்காகவே பல மணி நேரங்களை செலவிட்டனர்.
Buy Now ! Pay Daily !
அவ்வாறாக 90ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜியாவாக கலந்துவிட்ட ஜிடிஏவின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் 2008 முதல் தொடங்கியது. அல்ட்ரா ஹெச்டி, அல்ட்ரா ரியல் அனிமேஷன் என புது டெக்னாலஜிகளை வைத்து 2008ல் வந்த ஜிடிஏ 4ம் சரி, 2013ல் வெளியான ஜிடிஏ 5ம் சரி.. கேம் பிரியர்கள் இடையே சக்கைப்போடு போட்டது. இதில் GTA 5ல் முதல்முறையாக ஆன்லைன் இண்டராக்டிவ் முறைகளையும் ராக்ஸ்டார் கேமிங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
14 வருட காத்திருப்பு:
அதன்பின்னர் மேலும் பல அப்டேட்டுகளுடன் GTA6 வெளியாகும் என ராக்ஸ்டார் அறிவித்தது. அதற்கான எதிர்பார்ப்பில் கேம் பிரியர்கள் காத்திருக்க, கேமோ துருவ நட்சத்திரம் படம் போல ஒவ்வொரு முறையும் வெளியீட்டு தேதி அறிவிப்பது, தள்ளிப் போவது என தொடர்கதையாகவே இருந்து வந்தது. 14 வருடங்களாக தொடர் எதிர்பார்ப்பில் இருந்து வந்த GTA-6 ஒருவழியாக இன்று (நவம்பர் 19) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆன்லைனில் விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள GTA-6 தற்போதைக்கு Playstation, Xbox வெர்சன்கள் வெளியாகியுள்ளன. கேமர்களின் பிரியமான PC versions சற்றுத் தாமதமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொண்டாடும் கேம் பிரியர்கள்:
ஒரு புகழ்பெற்ற நடிகரின் படம் வெளியாவது போல GTA-6ன் இந்த வெளியீடு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கேம் வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான கேமர்ஸ் இந்த கேமை வாங்கி விளையாடி அதை வீடியோப் பதிவாகவும் வெளியிடத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்கள் முழுவதும் GTA 6 வைரலாகி வருகிறது. இந்த கேம் இந்திய விலையில் சாதாரண எடிசன் ரூ.5,999க்கும், அல்டிமேட் எடிசன் ரூ.7,499க்கும் கிடைக்கிறது. PS5 போன்ற கியர்களில் விளையாட 212 ஜிபி அளவு ஸ்டோரேஜ் தேவைப்படும் என ராக்ஸ்டார் அறிவித்துள்ளது.
தற்போது இந்த கேமை விளையாடி வரும் ப்ரோ கேமர்கள், இதன் கிராபிக் செயல்பாடு முந்தைய வெர்சன்களை விட சிறப்பாக உள்ளதாகவும், புதிய Cheat Codes, Tasks என மொத்தமுமே GTAவின் முந்தைய அனுபவங்களோடு சேர்ந்த புதிய விளையாட்டாக சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.






