← முகப்பு

ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்! பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழக அரசு!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் ஆட்சி நடந்து வரும் நிலையில் தவெக வாக்குறுதிகளில் ஒன்றான ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்! பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழக அரசு!

கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், களம் கண்ட முதல் தேர்தலிலேயே மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அதை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட திட்டங்களை அடுத்தடுத்து நிறைவேற்றி வருகின்றனர். முன்னதாக மகளிர் வெற்றி பயணம், தாய் மாமன் தங்க மோதிரம், காலை சிற்றுண்டி விரிவாக்கம் என தொடர்ந்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானதாக பார்க்கப்படும் ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் 6 இலவச சிலிண்டர்கள் கூறப்பட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, இலவச சிலிண்டர்களுக்கான பயனாளர்கள் பட்டியலைத் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தமிழகம் முழுவதும் 2.40 கோடி வீட்டு சமையல் கேஸ் இணைப்புகள் உள்ளன. இதில் ஒரு சிலிண்டர் மட்டும் இணைப்பு பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 1.10 கோடியாக உள்ள நிலையில் அதில் பிரதமரின் உஜ்வாலா கேஸ் இணைப்பு திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்றவர்கள் 42 லட்சம்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உஜ்வாலா கேஸ் இணைப்பு பெற்ற பயனாளர்கள், மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளர்கள், ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் உள்ளவர்கள் ஆகியோரின் தரவுகளை திரட்டி இலவச 3 சிலிண்டருக்கான பயனாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த 3 சிலிண்டர்களுக்கான தொகை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !