கோவை, இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் தம்பி சரவணனின் மகள் சா. பிரியங்கா, 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் முருகப்பெருமானின் ஏழாம் படைவீடாகப் போற்றப்படும் கோவை மருதமலை முருகன் கோவிலில் தனது பிரார்த்தனையை மேற்கொண்டார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற வேண்டுதலுடன், மருதமலை அடிவாரத்தில் இருந்து மலைக் கோவில் வரை உள்ள 837 படிக்கட்டுகளிலும் பரதநாட்டிய முத்திரைகள் மற்றும் அபிநயங்களுடன் நடனமாடியபடியே ஏறிச் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.
Buy Now ! Pay Daily !
சிறுமியின் இந்த பக்தி பூர்வமான முயற்சியை மலைக்கோவிலுக்கு வந்து இருந்த திரளான பக்தர்கள் மெய்சிலிர்ப்புடன் கண்டு பாராட்டினர்.
தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி பிரியங்கா "வரும் கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதற்காக முருக பக்தர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ், மாவட்டச் செயலாளர் தம்பி சரவணன், மாவட்டப் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் தனபால், கோவை கோட்டப் பொறுப்பாளர் குணா மற்றும் நகரப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





