← முகப்பு

டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்: யுஸ்வேந்திர சஹல் வரலாற்றுச் சாதனை!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற தனிப்பெரும் சாதனையை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் படைத்துள்ளார். 2026-27 சையத் முஷ்டாக் அலி டிராபி எலைட் குரூப்-பி போட்டியில் ஹரியானா அணிக்காக விளையாடியபோது, தமிழ்நாடு அணிக்கு எதிராக இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.

டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்: யுஸ்வேந்திர சஹல் வரலாற்றுச் சாதனை!

இண்டோரில் உள்ள டேலி காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹரியானா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 19.5 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடக்கத்திலேயே துஷார் ரஹேஜா (1) ஆட்டமிழந்தாலும், பாலசுப்பிரமணியன் சச்சின் மற்றும் அமித் சாத்விக் (38) ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்து அணியைத் தூக்கி நிறுத்தியது. தொடர்ந்து என். ஜெகதீசன் (9), கேப்டன் சாய் கிஷோர் (19) மற்றும் ஷாருக் கான் (22) ஆகியோர் ஓரளவு ரன்கள் சேர்த்தனர்.

சஹாலின் மாயாஜாலம்

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லுக்கு ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவையாக இருந்த நிலையில் களமிறங்கிய சஹால், அமித் சாத்விக்கை (38) போல்டாக்கி தனது 400-வது டி20 விக்கெட்டைக் கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து ஆர்.சாய் கிஷோர் மற்றும் மணிமாறன் சித்தார்த் ஆகியோரையும் வீழ்த்தி, 4 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். நிஷாந்த் சிந்துவும் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த நிலையில், 125 ரன்கள் என்ற இலக்கை ஹரியானா அணி 16.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டிப் பிடித்தது.

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு சஹாலிடம் 396 டி20 விக்கெட்டுகள் இருந்தன. பஞ்சாப்புக்கு எதிரான முதல் போட்டியில் விக்கெட் ஏதும் எடுக்காத அவர், சௌராஷ்டிராவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 399 என்ற எண்ணிக்கையைத் தொட்டார். மூன்றாவது போட்டியான தமிழ்நாட்டுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம், அவரது மொத்த டி20 விக்கெட்டுகளின் எண்ணிக்கை 346 போட்டிகளில் 402 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி டி20 விக்கெட் வேட்டைக்காரர்கள்

இந்திய அளவில் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சஹால் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள புவனேஸ்வர் குமாரை விட அவர் இப்போது 36 விக்கெட்டுகள் முன்னிலையில் இருக்கிறார். மேலும் இவ்வரிசையில் இடம்பெற்றுள்ள முக்கிய ஜாம்பவான்கள் பின்வருமாறூ:

யுஸ்வேந்திர சஹால் - 402 புவனேஸ்வர் குமார் - 366 ஜஸ்ப்ரீத் பும்ரா - 354 பியூஷ் சாவ்லா 329 ரவிச்சந்திரன் அஸ்வின் 323 அக்ஸர் படேல் 300 அர்ஷ்தீப் சிங் 294

சர்வதேச மற்றும் ஐபிஎல் பயணம்

2016 முதல் 2023 வரை இந்திய அணிக்காக 80 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஹால், 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் (சராசரி 25.09, எகானமி 8.19). கடைசியாக 2023 ஆகஸ்டில் அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஆட்டத்தில் பங்கேற்ற அவர், 2024 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஒரு போட்டியிலும் களமிறங்கவில்லை. இருப்பினும், உள்நாட்டு மற்றும் ஐபிஎல் அரங்கில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடங்கி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014–2021) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (2022–2024) அணிகளுக்காக விளையாடிய சஹால், தற்போது பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியின் முக்கிய வீரராகத் தொடர்கிறார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !