2035ம் ஆண்டு வரையிலான ஐசிசி கிரிக்கெட் தொடர்களை எந்த நாட்டில் நடத்துவது, அதற்கான கால அட்டவணைகளை தயார் செய்வதற்கான கூட்டம் இந்தோனேஷியாவில் நடைபெற்றது. அதில் 2031வரையிலான முக்கிய கிரிக்கெட் தொடர்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது..
சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக கோப்பை
Buy Now ! Pay Daily !
ஐசிசி தொடர்களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்களாக பார்க்கப்படுவது உலக கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி. கடந்த 2025ல் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை இந்திய அணி வென்றது. தற்போது 2029-க்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியாவில், அக்டோபர்9 முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும், 2031 ஐசிசி ஆடவர் உலக கோப்பை தொடரை இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து நடத்தும் என ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போட்டிகள் அக்டோபர் 9 முதல் நவம்பர் 23 வரை நடைபெறும்.
இந்த நீண்டகாலத் திட்டத்தில் இதர உலகக்கோப்பை தொடர்களின் தேதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன: - 2028 டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து (அக்டோபர் 12 - நவம்பர் 12) - * 2029 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி (WTC): இங்கிலாந்து (ஜூன் 8 - 12) - * 2030 டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து (ஜூலை 4 - ஆகஸ்ட் 4) - * 2031 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி (WTC): இங்கிலாந்து (ஜூன் 12 - 16) அடுத்த தசாப்தத்திற்கான இந்த முறையான கால அட்டவணை வெளியீடு, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்திய மைதானங்களில் அடுத்தடுத்து ஐசிசி கோப்பைப் போட்டிகள் நடைபெறுவது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.






