விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல்நிலையத்திற்குள்ளேயே, காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் இணைந்து கணபதி ஹோமம் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரோகிதர்களைக் கொண்டு காவல்நிலைய அறையிலேயே யாக குண்டம் அமைத்து, சீருடையுடன் மாலை அணிந்து ஆய்வாளர் வழிபாடு நடத்திய காட்சிகள் வெளியாகிப் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன .
Buy Now ! Pay Daily !
இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாகச் சிறுமி மாயமான வழக்கு, அழுகிய நிலையில் சடலம் மீட்பு மற்றும் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் எனப் பல்வேறு சிக்கலான மற்றும் மர்மமான வழக்குகள் அடுத்தடுத்து பதிவாகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக வந்த அதிர்ச்சிகரமான வழக்குகள் மற்றும் பணிச் சூழல் காரணமாகவே, காவல்நிலையத்தில் இந்தக் கணபதி ஹோமம் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
பொதுமக்கள் வந்து செல்லும் அரசு அலுவலகமான காவல்நிலையத்திற்குள், காவல் ஆய்வாளர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து வந்து சிறப்பு ஹோமம் நடத்தியது அப்பகுதியினரிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.



