← முகப்புவிழுப்புரம் →

ஆசிரியரே வராத பள்ளி!? ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய மாணவர்கள்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கந்தாடு அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை முதல் வகுப்புகள் திறக்கப்படவில்லை.

ஆசிரியரே வராத பள்ளி!? ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய மாணவர்கள்

கந்தாடு அரசு தொடக்கப்பள்ளியில் 4 ஆசிரியர்களும் வராததால் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியிலேயே காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்களும் இன்று பள்ளிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், காலையில் பள்ளிக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், வகுப்பறை திறக்கப்படாமல் பள்ளிக்கு வெளியிலேயே காத்திருந்தனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மதியம் வரை காத்திருந்தும் ஆசிரியர்கள் யாரும் வராததால், மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ஒரே நேரத்தில் நான்கு ஆசிரியர்களும் விடுப்பு எடுத்த நிகழ்வு, பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலையிலேயே கந்தாடு பொதுமக்கள், கல்வித் துறைக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இந்தப் பள்ளியில் முன்பு 300 மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது 100 மாணவர்கள் மட்டுமே படிப்பதாகவும், தலைமை ஆசிரியர் சரியான முறையில் பணி செய்யவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திடீர் திடீரென அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வராமல் இருப்பதும், சென்சஸ் பணி எனக் கூறப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை என்றும், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்ற பொறுப்புணர்வோடு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கை.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !