திருப்பூரைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் ஜமாலுதீன், இன்று காலை செட்டிபாளையத்தில் வாடிக்கையாளரை இறக்கிவிட்டு, திருப்பூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பலவஞ்சிபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது, வடமாநில இளைஞர்கள் இருவர் சாலையைக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவில் இருந்த சிக்னல் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
Buy Now ! Pay Daily !
இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், ஏர்பேக் திறந்ததால் ஓட்டுநர் ஜமாலுதீன் காயமின்றி உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




