← முகப்புதிருப்பூர் →

இறந்த நிலையில் குப்பையில் கிடந்த பச்சிளம் குழந்தை!

திருப்பூரில் குப்பைத் தொட்டியில் பச்சிளங்குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இறந்த நிலையில் குப்பையில் கிடந்த பச்சிளம் குழந்தை!

திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையம் எதிரே உள்ள திருப்பூர் கிளை நூலகம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் பச்சிளங்குழந்தை ஒன்று கால்கள் இல்லாமல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூய்மைப்பணியாளர்கள் வழக்கம் போல் திருப்பூர் கிளை நூலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த குப்பையை அகற்றுவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தையின் சடலம் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டுள்ளனர். உடனடியாக தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை அவசர ஊர்தி மூலம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !