← முகப்புதிருப்பூர் →

உள்ளாட்சியை முடக்கும் மத்திய, மாநில அரசுகள்? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை முடக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக கூறி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சியை முடக்கும் மத்திய, மாநில அரசுகள்? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை முடக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் நிதி முடக்க நடவடிக்கைகளைக் கண்டித்தும், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி உரிமை மற்றும் சுயாட்சியைப் பாதுகாத்திட வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 16 ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 2026-27 ஆம் ஆண்டிற்கு அடிப்படை மற்றும் செயல்திறன் மானியமாகப் பரிந்துரைத்துள்ள நிதி இன்னும் மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. இந்த நிதி நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் அடிப்படைச் சேவைகளான குடிநீர், சாலை, கழிவு மேலாண்மை, தெரு விளக்குகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய நிதி. ஆனால், இதுவரை இந்த நிதி முழுமையாக விடுவிக்கப்படவில்லை. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிதியை, மாநில அரசு உரிய முறையில் பெற்று உள்ளாட்சிகளுக்கு விநியோகிக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் உடனடியாக தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் முழங்கள் எழுப்பட்டன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் உள்பட கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !