தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு பேருந்துகளோடு தனியார் மினி பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் அப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது அன்றாடப் பணிகளுக்காகத் தனியார் மினி பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
Buy Now ! Pay Daily !
பேருந்தில் பயணம் செய்தபோது, அந்தப் பேருந்தின் நடத்துநர், இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், உடனடியாக இது குறித்துப் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடையநல்லூர் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட தனியார் மினி பேருந்து நடத்துநரைப் பிடித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் இளம் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அந்தப் பேருந்து நடத்துநர் மீது வழக்குப் பதிவு செய்த கடையநல்லூர் போலீசார், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




