← முகப்புதென்காசி →

திருமண மண்டபத்தில் திருடிய நபர்கள்- தட்டி தூக்கிய சங்கரன்கோவில் போலீசார்!

சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது வெள்ளி பொருட்கள் மற்றும் செல்போன்களை திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு வந்து சென்ற மேலக்கலங்கல் ஊரைச் சேர்ந்த முருக லட்சுமி என்பவரிடமிருந்து மர்ம நபர்கள் சிலர் சுமார் 81 கிராம் வெள்ளிப் பொருள்களையும், மூன்று செல்போன்களையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்நிலையில் அப்பெண் சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின் பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சங்கரன்கோவில் அம்பேத்கர் நகரை சேர்ந்த மாரிசாமி மகன் சின்ராசு (23) மற்றும் கோமதியாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சந்தோஷ் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் திருமண வீட்டில் திருடிய வெள்ளிப் பொருட்கள் மற்றும் மூன்று செல்போன்களையும் போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !