← முகப்புதென்காசி →

கெமிக்கல் குடோனில் திடீர் தீ விபத்து!

தென்காசியில் விஸ்வநாதர்கோவில் ரத வீதியில் கெமிக்கல் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

கெமிக்கல் குடோனில் திடீர் தீ விபத்து!

தென்காசியில் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் திருக்கோவில் அருகேயுள்ள வடக்கு ரத வீதியில் திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் கெமிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடைக்கு தேவையான கெமிக்கல் பொருட்களை கடைக்கு அருகில் உள்ள குடோனில் வைத்துள்ளார். இந்த குடோனில் ஆசிட், சோப் ஆயில் உள்ளிட்ட பல்வேறு வகையான கெமிக்கல் பொருட்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்நிலையில், குடோனில் இருந்து திடீரென புகை வெளியேறியதைத் தொடர்ந்து தீ மளமளவெனப் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இச்சம்பவம் குறித்து உடனடியாக தென்காசி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், தீ வேகமாகப் பரவியதால் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் பல லட்சம் மதிப்பிலான கெமிக்கல் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.

கெமிக்கல் குடோனில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் ரசாயனப் பொருட்களின் கடுமையான வாசனை காற்றில் கலந்து பரவியது. இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது.

தென்காசி நகரின் முக்கிய வர்த்தகப் பகுதியான மெயின் பஜாரில், பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் ரத வீதியில் நடைபெற்ற இந்தத் தீ விபத்து நகர மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை முற்றிலும் அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் மின் கசிவு காரணமாக அல்லது வேறு ஏதும் தீ விபத்துக்கு காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து விசாரித்து வருகின்றனர்.

குடோனில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !