பொங்கல் பண்டிகை நாள்களும், அவற்றுக்கான முன்பதிவு தேதிகளும் பின்வருமாறு:
ஜனவரி 12 பயணம் செய்ய: இன்று (நவம்பர் 13) முன்பதிவு செய்யலாம். ஜனவரி 13 (புதன்கிழமை) பயணம் செய்ய: நாளை (நவம்பர் 14, சனிக்கிழமை) முன்பதிவு செய்ய வேண்டும். ஜனவரி 14 (போகிப் பண்டிகை) பயணம் செய்ய: வரும் நவம்பர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முன்பதிவு தொடங்குகிறது. ஜனவரி 15 (பொங்கல் திருநாள்): வரும் நவம்பர் 16 அன்று முன்பதிவு தொடங்குகிறது.
Reach our readers. Contact us to advertise in this space.
ஊர் திரும்புவதற்கான முன்பதிவு தேதிகள்
ஜனவரி 18-ல் ஊர் திரும்ப: நவம்பர் 19-ம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 19-ல் பயணிக்க: நவம்பர் 20-ம் தேதி முன்பதிவு தொடங்குகிறது.
முன்பதிவு செய்யும் முறை
பயணிகள் அனைவரும் ஐஆர்சிடிசி (IRCTC) அதிகாரப்பூர்வ இணையதளம், அதன் மொபைல் செயலிகள் (Apps) மூலமாகவும் அல்லது ரயில் நிலையங்களில் உள்ள நேரடி முன்பதிவு மையங்களிலும் காலை 8 மணி முதல் தங்களது டிக்கெட்டுகளைப் பதிவு செய்து கொள்ளலாம். கூட்ட நெரிசலைத் தவிர்க்க விரும்பும் பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்வது சிறந்தது.
.






