← முகப்பு

MLA அருள்விக்னேஷை காப்பாற்ற முயலும் CM? – உதயநிதி குற்றச்சாட்டு

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள்விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ள நிலையில் முதல்வர் விஜய் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

MLA அருள்விக்னேஷை காப்பாற்ற முயலும் CM? – உதயநிதி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள்விக்னேஷ் மதுபோதையில் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுத்தொடர்பாக கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் அறிக்கை வெளியிட்டனர்.

அதை தொடர்ந்து நேற்று அனைத்து தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முதல்வர் விஜய் சென்னையில் கூட்டிய நிலையில், இந்த கூட்டத்தில் சமீபமாக அதிகம் புகார்கள் வரும் எம்.எல்.ஏக்களை விஜய் விசாரித்து நடவடிக்கை எடுக்கப் போகிறார் என பேசிக் கொள்ளப்பட்டது. மற்றொரு பக்கம், எதிர்கட்சிகள் சேர்ந்து ஆட்சி கவிழ்ப்பு சதியில் இறங்குவதாகவும், அதுகுறித்த ஆலோசனை கூட்டத்திற்காகதான் விஜய் வரச் சொன்னதாகவும் தகவல்கள் வெளியானது.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

இப்படியான சூழலில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏவை காப்பாற்றும் நோக்கில் முதல்வர் விஜய் செயல்படுவதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ”கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?

கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?

Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.

ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.

ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?

மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்” என்று கூறியுள்ளார்.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.