← முகப்புநாகப்பட்டினம் →

Viral Video: எல்லாம் ஓடுங்கள்ல.. ட்ரோனை பார்த்ததும் தெறித்து ஓடிய குடிமகன்கள்!

வயல்வெளிகளில் பறந்த ட்ரோன்; சரக்கு பாட்டிலோடு பதறி ஓடிய குடிமகன்கள்; கீழ்வேளூர் பகுதியில் குற்றங்களைத் தடுக்க ட்ரோன் மூலம் காவல் துறையினர் தீவிர வான்வழிக் கண்காணிப்பு

வயல்வெளிகளில் பறந்த ட்ரோன்; சரக்கு பாட்டிலோடு பதறி ஓடிய குடிமகன்கள்; கீழ்வேளூர் பகுதியில் குற்றங்களைத் தடுக்க ட்ரோன் மூலம் காவல் துறையினர் தீவிர வான்வழிக் கண்காணிப்பு

​நாகப்பட்டினம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் செயல்களை முற்றிலுமாகத் தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

​இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழிக் கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கீழ்வேளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் ட்ரோன் மூலம் தீவிர வான்வழிக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் பறந்த ட்ரோன் கேமராவை பார்த்து அப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை பிடித்த காவல்துறையினர் பொது வெளியில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுவித்தனர்.

​மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை தொடர்ந்து முனைப்புடன் நாகை மாவட்ட காவல்துறை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !