← முகப்பு

திருப்பரங்குன்றத்திற்கு வந்த இஸ்லாமியர்கள்! தர்காவில் சிறப்பு தொழுகை!

இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் மீது தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சிக்கந்தர் தர்காவிற்கு இஸ்லாமிய பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

திருப்பரங்குன்றத்திற்கு வந்த இஸ்லாமியர்கள்! தர்காவில் சிறப்பு தொழுகை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் மீது தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கார்த்திகையன்று அங்கு தீபம் ஏற்றப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாக மாறிய நிலையில் நேற்று, உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் மதுரை மாவட்ட ஆட்சியர், தொல்லியல் துறை விளக்கம் அளித்தனர்.

அதன்பின்னர் இன்று திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கோவில் அறங்காவலர் குழுவை கலைத்து உத்தரவிட்டதோடு, மலையை சுற்றி சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மலை மீது ஏறி பக்தர்களும் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதனால் மாலை நேரத்தில் தீபம் ஏற்ற ஏராளமான பக்தர்கள் வரலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே சிக்கந்தர் தர்காவில் வழக்கமான பிரார்த்தனைகள் செய்யவும், இஸ்லாமியர்கள் சென்று வரவும் அனுமதி தொடரும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று கேரளாவில் இருந்து இஸ்லாமிய பயணிகள் பலர் காலையிலேயே சிக்கந்தர் தர்காவிற்கு சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !