← முகப்புஇராமநாதபுரம் →

குடிநீர் வசதியின்றி தவிக்கும் நோயாளிகள்!

திருவாடானை அரசு மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாடின்றி கிடப்பதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

குடிநீர் வசதியின்றி தவிக்கும் நோயாளிகள்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

அவர்களுக்கும், உடன் வரும் உறவினர்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கில் பல லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த RO சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

ஆனால், அமைக்கப்பட்ட சில நாட்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில், பின்னர் பழுதடைந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆழ்துளைக் கிணறு, குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்தன.

ஆனால், தற்போது அவையும் செயலிழந்து காணப்படுவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர் வழங்குவதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட திட்டம் முறையாகப் பராமரிக்கப்படாததால் பயன்பாடின்றி கிடப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த ஆழ்துளைக் கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைச் சீரமைத்து, நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் தடையின்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பகுதிவாசிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !