← முகப்புஇராமநாதபுரம் →

பரமக்குடியில் சித்தா டாக்டரிடம் கைவரிசை காட்டிய ஊழியர்கள்!

பரமக்குடியில் சித்தா மருத்துவரின் நிறுவன வங்கிக் கணக்குகளில் இருந்து அவரது சொந்த ஊழியர்களே பண மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடியில் சித்தா டாக்டரிடம் கைவரிசை காட்டிய ஊழியர்கள்!

பரமக்குடியைச் சேர்ந்த சித்தா மருத்துவர் வரதராஜன் (65), சோலைமலை மருந்தகத்தை நடத்தி வருகிறார். இவரது மூன்று நிறுவனங்களின் வங்கி வரவு, செலவுகளைக் கவனிக்கும் பணியில் சரண்யா, பூபாலன் உள்ளிட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் வங்கிப் பரிவர்த்தனைகளை மருத்துவர் ஆய்வு செய்தபோது, மின்கட்டணம், ஊழியர்களின் சம்பளம், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட செலவுகளுக்கான பணப் பரிமாற்றங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மருத்துவரின் கைப்பேசிக்கு வந்த ரகசியக் OTP எண்ணை பயன்படுத்தி, ஊழியர்கள் திட்டமிட்டு பணத்தைப் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், சந்தேகம் எழாமல் இருக்க பணப் பரிமாற்ற விவரங்களையும் கைப்பேசியில் இருந்து அழித்துள்ளனர்.

கடந்த 2024-ம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக ரூ.1 கோடியே 20 லட்சத்து 43 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ரூ.42 லட்சத்து 60 ஆயிரத்தை மட்டும் மருத்துவரின் வங்கிக் கணக்கிற்குத் திருப்பி அனுப்பியுள்ளனர். மீதமுள்ள ரூ.77 லட்சத்து 83 ஆயிரத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து மருத்துவர் வரதராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக வடிவேல்முருகன் (51), ராமலட்சுமி (68) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

இந்தப் பணமோசடியில் முக்கிய மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் சரண்யா, கணேஷ் பாண்டி, பூபாலன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மருத்துவரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் கையாடல் செய்த சம்பவம் பரமக்குடியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !