திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், கார்த்திகை அன்று தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை வழங்கியிருந்தது. ஆனால் அதை மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றாதது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் தரப்பு, மத்திய தொல்லியல் துறை தரப்பு இடையே கடும் விவாதம் நிகழ்ந்தது. அனைத்துக் கருத்துகளையும் கேட்ட உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறியிருந்தது.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறங்காவலர் குழுவை கலைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் தலைமையில் கோயில் நிர்வாக குழு அமைத்து உத்தரவு.
மேலும், நாளை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் மீது விளக்கு ஏற்ற அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24 ஆம் தேதி உச்சிப்பிள்ளையார் கோவிலில் எந்த தீபம் ஏற்றப்பட்டதோ அந்த தீபத்திலிருந்து தீபத்தை எடுத்துக் கொண்டு போய் தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவு. ஒவ்வொரு பக்தரும் தூண் பகுதிக்கு சென்று விளக்கு ஏற்றலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலையைச் சுற்றி சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வீரர்களை பாதுகாப்புக்கு நிறுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






