முன்பெல்லாம் கட்சித் தொண்டர்கள் இடையே வாய் சண்டை, வாக்குவாதம், சமூக வலைதள அவதூறு சண்டை என பல்வேறு சண்டைகள் தொடர்ந்து வந்த நிலையில், அவை இப்போது மேலும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்து ஏஐ வீடியோக்களாக மாறியுள்ளன. ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களும் பிற கட்சியை சேர்ந்த தலைவர்களை ஏற்கனவே உள்ள படக் காட்சிகளில் ஏஐ மூலமாக இணைத்து வெளியிடும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் திமுக பிரபலமும், சென்னை மேயருமான பிரியாவை ஏஐ மூலமாக தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் சிலர் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவரம் மேயர் பிரியாவிற்கு தெரிய வந்த நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் ” இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Buy Now ! Pay Daily !
சென்னை மேயர் பிரியா ஏஐ மூலம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது குறித்து திமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த செயல் குறித்து கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ” பெண்களுக்கு எதிரான கீழ்த்தரமான இணையத் தாக்குதல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, சென்னை மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார் அன்புச் சகோதரி மேயர் பிரியா.
மாவட்ட ஆட்சியர் முதல் சென்னை #மேயர்_பிரியா வரை யாரையும் விட்டுவைக்காத இந்த Virtual Abusers மீது நீதிமன்றம் சொன்ன பிறகும் தவெக அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய இணையத் தாக்குதல்களில் ஈடுபடுவோர் மீது உரிய ஆதாரங்களுடன் கழகம் சார்பில் திமுக சட்டத்துறை நீதிமன்றத்தை நாடி, சட்ட நடவடிக்கை எடுக்கும்!” என தெரிவித்துள்ளார்.






