← முகப்புதிருவாரூர் →

அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து! 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

திருவாரூர் அருகே அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

திருவாரூரில் இருந்து தேவூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தும், வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்தும், திருவாரூர் அருகே கானூர் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்த பொழுது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயம் பட்டவர்களை மீட்டு ஐந்து ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் விபத்து ஏற்பட்ட இடம் திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட எல்லையான கானூர் என்கிற இடத்தில் காவல்துறையினர் சோதனை சாவடி அருகே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அரசு பேருந்து ஓட்டுனருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு திடீரென அரசு பேருந்து நிலை தடுமாறி எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் விஜயலட்சுமி, சசிகலா, மரகதம், மணிகண்டன், வசந்தா, சரவணன், கண்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நபர்கள் படுக்காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !