← முகப்புதிண்டுக்கல் →

போதைப்பொருள், லாட்டரி விற்கப்படும் இடத்தை நானே சொல்கிறேன்: காவல்துறையைச் சீண்டிய திண்டுக்கல் சீனிவாசன்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுவிட்டது; இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

போதைப்பொருள், லாட்டரி விற்கப்படும் இடத்தை நானே சொல்கிறேன்: காவல்துறையைச் சீண்டிய திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு வாக்காளர் சேர்க்கை பணிகள் குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தமிழக அரசின் மீதும் சட்டம் ஒழுங்கு நிலைமை மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது "திண்டுக்கல் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன. திண்டுக்கல்லில் எங்கு போதைப்பொருள் விற்கப்படுகிறது என்பதை நானേ வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகிறேன். தாலுகா அலுவலகம் அருகில் கறி மற்றும் அடுப்புக்கரி விற்கும் பகுதிக்கு உள்ளே உள்ள 'லயன் தெரு'வில் கஞ்சா, போதைப்பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனை தடையின்றி நடக்கிறது. தைரியம் இருந்தால் காவல் துறை அங்கு சென்று அவர்களைப் பிடிக்கட்டும்" என அவர் சவால் விடுத்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டதாகவும், காவல்துறையைக் கண்டு திருடர்களும் குற்றவாளிகளும் சிறிதும் பயப்படுவதில்லை என்றும் அவர் சாடினார். ஹைதராபாத் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வந்து கூட தமிழகத்தில் தைரியமாகக் கொள்ளையடித்துச் செல்வதாகவும், மாநில அரசால் குற்றங்களைத் தடிக்க முடியவில்லை எனவும் அவர் விமர்சித்தார். கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் நூலகப் புத்தகம் கொள்முதல் முறைகேடு போன்ற விவகாரங்களில் ஆளுங்கட்சி உண்மையை மூடிமறைத்து மக்களை ஏமாற்றி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் அரசியல் வியூகங்கள் குறித்துப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "தற்போதைய ஆளுங்கட்சிக்கு மொத்த வாக்குகளில் 35 சதவீதம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 65 சதவீத வாக்குகளைக் கூட்டணியின் மூலம் ஒருங்கிணைத்து, ஆளுங்கட்சியை எப்படி வீழ்த்துவது என்பதற்கான வியூகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக வகுத்து வருகிறார். தேர்தல் கூட்டணி குறித்த நல்ல முடிவு விரைவில் வெளியாகும். இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்தும் திட்டம் எங்கள் கட்சியில் இல்லை" என்று அவர் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை 2028-க்கு தள்ளிவைப்பதாகக் கூறுவது இந்த அரசு செயல்படாத ஒன்று என்பதற்குச் சான்றாகும் என்றார். மேலும், மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் உள்ளூர் சிறு வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !