← முகப்புநாகப்பட்டினம் →

எம்எல்ஏ அருள்விக்னேஷை கைது செய்ய வேண்டும் - சிபிஎம் பாலக்கிருஷ்ணன் பேட்டி

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்; திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்த வேண்டிய அவசியமில்லை: நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கே.பாலக்கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த பொது

இன்று கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படும் நிலையில், திருப்பரங்குன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் மீது தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுமா என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, மதுரை முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இவ்வாறான பல சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். நாகப்பட்டினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது வினோதமாக உள்ளது. இந்த தீர்ப்பை அமல் படுத்த வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை என்று தெரிவித்தவர் தமிழகத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறது என்றார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள்விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்த உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆட்சியர் புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுப்பேன் என்று இருப்பது முறையல்ல என்று கூறியவர் எம்எல்ஏ அருள்விக்னேஷை உடனடியாக கைது செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார். நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தண்ணீரில்லாம் காயும் சம்பா பயிர்களை ஆய்வு செய்து வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவராணம் வழங்க வேண்டும் என்றார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !