← முகப்புநாகப்பட்டினம் →

நிவாரணம் கோரி விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாகை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் நூதன போராட்டம்; விவசாயிக்கு மாலை அணிவித்து பிரேதம் போல் படுக்க வைத்து பறை அடித்தும் ஒப்பாரி வைத்து அழுது கும்மியடித்தும், 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நூதன போராட்டம்

பிணம் போல் மாலையிட்டு விவசாயிகள் போராட்டம்

தமிழக வெற்றி கழக தேர்தல் அறிக்கைகளின் படி கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், நாகப்பட்டினம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வேதாரண்யம், கீழ்வேளூர், தலைஞாயிறு, திருமருகல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மேள தாளங்கள் முழங்க போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், மாலை அணிந்த விவசாயி ஒருவரை பிணமாக வைத்து, அவரை சுற்றி உட்கார்ந்து சக விவசாயிகள் கும்மி அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், முழுமையான விவசாய கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50, ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய கூலி தொழிலாளிகளுக்கு 20, ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமாரிடம் விவசாயிகள் வழங்கினர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !