← முகப்புநாகப்பட்டினம் →

நாகை மருத்துவமனைகளில் அமைச்சர் நேரில் ஆய்வு! கோரிக்கை வைத்த மக்கள்!

நாகை அரசு மருத்துவமனை மற்றும் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு: நாகை அரசு மருத்துவமனையை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தி செயல்படுத்த வேண்டும் என மீனவர் கிராமப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மருத்துவமனைகளில் அமைச்சர் நேரில் ஆய்வு! கோரிக்கை வைத்த மக்கள்!

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளையும் பார்வையிட்ட அமைச்சர், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள், தேவையான கூடுதல் வசதிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், மருத்துவக் கல்லூரியின் செயல்பாடுகள், மருத்துவக் கல்வி மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

முன்னதாக, நாகை வெளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சரிடம், மீனவர் கிராமப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில், நாகை அரசு மருத்துவமனையை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !