← முகப்புநாகப்பட்டினம் →

நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

நகராட்சி, பேரூராட்சிக்கு வழங்கவேண்டிய நிதியை முடக்கி வைத்திருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன கோஷம் எழுப்பியபோது எடுத்த படம்

நகராட்சி, பேரூராட்சிக்கு வழங்கவேண்டிய நிதியை முடக்கி வைத்திருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சிக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழக தவெக அரசு நிறுத்திவைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகை நகராட்சி, வேதராண்யம் நகராட்சி, கீழ்வேளூர் பேரூராட்சி, திட்டச்சேரி பேரூராட்சி, தலைஞாயிறு பேரூராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்க் கொள்ளுவதற்கான நிதியை வழங்காமல் தமிழக அரசு முடக்கி வைத்திருக்கிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதனால் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. இதனை கண்டித்து கீழ்வேளூர் பேரூராட்சி முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படனர். மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி நிதியை முடக்கி வைத்திருக்கும் தமிழக தவெக அரசையும், மத்திய மோடி அரசையும் கண்டித்தும், நிதியினை உடனடியாக விடுவிக்க கோரியும், உள்ளாட்சிகளின் அதிகாரத்தை பறிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதே போன்று நாகை நகராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி, திட்டச்சேரி பேரூராட்சி, தலைஞாயிறு பேரூராட்சி, வேதராண்யம் நகராட்சி அலுவலகம் முன்பாக கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !