மலையாளத் திரையுலகின் மூத்த நடிகர் டி.ஜி.ரவியின் மகனாகிய ஸ்ரீஜித் ரவி, 60-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்,
இவர், தமிழ் சினிமாவிலும் ‘கும்கி’, ‘வேட்டை’, ‘மத யானை கூட்டம்’, ‘ஆழி’ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே அறியப்பட்டவர்.
Buy Now ! Pay Daily !
வழக்கின் பின்னணி
ஸ்ரீஜித் ரவி கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு பூங்காவிற்கு அருகே 14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகளின் முன்னிலையில் நிர்வாணமாக போஸ் கொடுத்ததாகவும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் புகார் எழுந்தது.
புகாரை விசாரித்த கேரள போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை முக்கிய ஆதாரமாகத் திரட்டினர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் கருப்பு நிற காரில் வந்ததாகவும், அவரைத் தங்களுக்கு அடையாளம் தெரியும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் வாக்குமூலம் அளித்தனர்.
இதன் அடிப்படையில் காரின் விவரங்களைக் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், நடிகர் ஸ்ரீஜித் ரவியைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். முன்னதாக, பாலக்காட்டிலும் இதே போன்றதொரு குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை விசாரித்த திருச்சூர் விரைவு சிறப்பு நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீஜித் ரவிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக அவருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம், தற்காலிக ஜாமீனும் அளித்துள்ளது.






