தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வரும் நிலையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், புதிய அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இலவச சைக்கிள் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து நவீன சைக்கிள்கள் வழங்க திட்டமிடப்பட்டது.
இதற்காக நவீன மாடல் சைக்கிள்கள் (ஆண், பெண் இருவருக்கும் தனித்தனி மாடல்கள்), ஹெல்மெட், வாட்டர் பாட்டில் அடங்கிய தொகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தேர்வாகியுள்ளது. மொத்தம் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் விலையில்லா நவீன சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில் சைக்கிள்களின் தரம் எப்படி இருக்க வேண்டும் என தமிழக அரசு நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன்படி, ஹீரோ சைக்கிள்ஸ் வழங்கும் அனைத்து நவீன சைக்கிள்களுக்கும் ப்ரேம், போர்க், ஹேண்டில் பாருக்கு 5 ஆண்டுகள் வாரண்டியும், ஹெல்மெட்டுக்கு 1 ஆண்டு வாரண்டியும் வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சைக்கிளின் பாகங்கள் ஐ.எஸ் தரச்சான்று பெற்றதாக இருக்க வேண்டும் எனவும், 2 காலிபர் ப்ரேக்குகள் பொருத்த வேண்டும், ERW Steel ட்யூப்களால் சைக்கிள் ப்ரேம் உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தப்படி மாணவர்களுக்கான சைக்கிள்களுக்கு ஒரு சைக்கிளுக்கு ரூ.5,260-ம், மாணவிகளுக்கான சைக்கிளில் ஒரு சைக்கிளுக்கு ரூ.5,130-ம் செலவாகும். மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் Hero AVIRA 26T மாடல் சைக்கிள்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
விஜய் முதல்வராக பொறுப்பேற்றபின் வழங்கப்படும் சைக்கிள்கள் என்பதால் தரமானதாகவும், மாணவர்களுக்கு பிடித்த வகையிலும் இருக்க வேண்டும் என்பதில் முதல் விஜய் மிகவும் திட்டவட்டமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.






