← முகப்பு

நயினார் நாகேந்திரன் கைது! பரபரப்பான சூழலில் திருப்பரங்குன்றம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், பாஜக தலைவர்கள் நுழைவதற்கு காவல்துறை தடை விதித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நயினார் நாகேந்திரன் கைது! பரபரப்பான சூழலில் திருப்பரங்குன்றம்!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தாலும், தற்காலிக அனுமதியை வழங்கியிருந்தது. அதன்படி இன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டிய நிலையில், மதுரை முழுவதும் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம், அதிகாரிகள் தவிர பிறருக்கு அனுமதி கிடையாது என உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ள நிலையில், கீழேயிருந்து தீபத்தை காண இந்து முன்னணி, பாஜகவை சேர்ந்த பலர் திருப்பரங்குன்றம் நோக்கி விரைந்த நிலையில் அவர்கள் காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளனர். காலையிலேயே முன்னாள் பாஜக தமிழக தலைவரும், இணை அமைச்சருமான எல்.முருகன் திருப்பரங்குன்றம் வந்த நிலையில் காவல்துறையால் வழிமறிக்கப்பட்டார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தற்போது பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையிலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த நிலையில் தச்சநல்லூர் சோதனைச்சாவடியில் அவரை தடுத்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். இது பாஜகவினரிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

அதேசமயம் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்கிறாரா என்பது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஒருவேளை மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றவில்லை என்றால் அவர் நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் பேசியுள்ளார். தொடர்ந்து பரபரப்பான சூழல் திருப்பரங்குன்றத்தில் நிலவி வரும் நிலையில் இன்று தீபம் ஏற்றப்படுமா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லாததால் பக்தர்கள், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !