← முகப்பு

முதல்வர் விஜய்யை கண்டித்து கோயில்கள் முன் தீப்பந்த போராட்டம்! – பாஜக அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து தமிழகம் முழுவதும் கோயில்கள் முன்பாக தீப்பந்த போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

முதல்வர் விஜய்யை கண்டித்து கோயில்கள் முன் தீப்பந்த போராட்டம்! – பாஜக அறிவிப்பு!

திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் உள்ள தூண் மீது தீபம் ஏற்ற வேண்டுமென கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்தாலும், வேறு சில நிபந்தனைகளுடன் தீபம் ஏற்ற புதிய அனுமதி ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியது.

ஆனாலும் கார்த்திகை அன்று தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதுகுறித்து தமிழக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தீபம் ஏற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத தவெக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கோயில்கள் முன்பாக தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதுகுறித்து பதிவிட்டுள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், ” நாளை (27.11.2026) மாலை 6 மணிக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள பெரும் ஆலயங்களில் தீப்பந்தம் ஏந்தி நடைபெறும் பேரணியில் முருக பக்தர்களும் ஆன்மிக அன்பர்களும் திரளாகப் பங்கேற்போம்! ஒற்றுமையை நிலைநாட்டுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மண்டல வாரியாக தீப்பந்த போராட்டத்திற்கான பொறுப்பாளர்கள் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படாதது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், தமிழக பாஜக தீப்பந்த போராட்டத்தை அறிவித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !