← முகப்பு

ஓட்டுனர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்! நீதிமன்றம் காட்டம்! – கனிமொழி கேள்வி!

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுனர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஓட்டுனர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்! நீதிமன்றம் காட்டம்! – கனிமொழி கேள்வி!

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுனர் பாலகிருஷ்ணன் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. பாலகிருஷ்ணன் இறப்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி புகாரளித்த நிலையில், பாலகிருஷ்ணனின் பிரேத பரிசோதனையில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சாத்தான்குளம் போல செக்கானூரணியிலும் காவல் மரணம் ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த நிலையில், பாலகிருஷ்ணன் சித்ரவதை செய்யப்பட்டு இறந்துள்ளார் என்பது தெளிவாக தெரிவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

நீதிமன்றம் காட்டம்

இதுகுறித்து பேசிய நீதிமன்றம் ”சட்ட நடைமுறைகள் எதையும் காவல்துறை பின்பற்றவில்லை. ஓட்டுனர் பாலகிருஷ்ணன் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுதான் இறந்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர்கள் தொடங்கி அடிமட்ட ஊழியர்கள் வரை காவல் நிலையத்தில் இருந்த அனைவருமே கைது செய்யப்பட்டு விசாரிக்க வேண்டியவர்கள்” எனக் கூறியுள்ளது.

மேலும் முறையாக வழக்குப்பதியாமல் எப்படி இரவு முழுவதும் பாலகிருஷ்ணனை காவல் நிலையத்தில் வைத்திருந்தீர்கள் என்றும், அவர் மீது தவறே இருந்தாலும் அவரை அடித்துத் துன்புறுத்தியது பெரிய தவறு என்றும் காவல்துறையினரை கண்டித்துள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சொல்லி வழக்கை நவம்பர் 26க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

கனிமொழி எம்.பி கேள்வி

இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் அரசை கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ள திமுக எம்.பி கனிமொழி, ” மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், அப்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது.

புகாரளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்துகொள்ள ரூ. 3 லட்சமும் அரசு வேலையும் தருவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது?

பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !