← முகப்பு

மத மோதல்களை ஊக்குவிக்கிறாரா முதல்வர் விஜய்? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கோரி வரும் நிலையில், சில இஸ்லாமிய அமைப்புகள் மலையில் தீபம் ஏற்ற விட மாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மத மோதல்களை ஊக்குவிக்கிறாரா முதல்வர் விஜய்? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்!

திருப்பரங்குன்றத்தில் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு கடந்த ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்த நிலையில், அது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன. இறுதியில் கடந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும். தீப ஜோதி முழுநாள் இருக்க அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறது.

தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், சமீபத்தில் முஸ்லீம் ஐக்கிய ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மலையில் தீபம் ஏற்றக்கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதுகுறித்த வீடியோவை ஷேர் செய்து, இந்த விவகாரத்தில் அரசின் நிலைபாடு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் ” திருப்பரங்குன்றத்து தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவே விட மாட்டோம் என உச்சநீதிமன்றம் வரை சென்று தவெக அரசு மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதையும், கடந்த 15 ஆம் தேதி மதுரை பழங்காநத்தம் பகுதியில் ‘சிக்கந்தர் மலை எங்கள் மலை’ என முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியதையும் இரு வேறு நிகழ்வுகளாக நம்மால் கடந்து செல்ல முடியவில்லை.

“சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், சினம்மிகு முருகன் தண் பரங்குன்றத்து” என சங்ககால நூலான அகநானூறு குறிப்பிடும் திருப்பரங்குன்ற மலையை, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டுகளும், சமணக் கல்வெட்டுகளும் நிறைந்திருக்கும் முருகனின் முதலாம் படைவீட்டை, ‘சிக்கந்தர் மலை’ என்று குறிப்பிட்டு இஸ்லாமியர்கள் ஆக்கிரமிக்க முயல்வதை ஆளும் அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?

கடந்த 1923-இல் முழுமையான வரைபடம் தயாரிக்கப்பட்டு, தர்கா மற்றும் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள நெல்லித்தோப்பு, நெல்லித்தோப்பிலிருந்து தர்காவுக்கு போகும் படிக்கட்டு ஆகியவை மட்டுமே இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது எனவும், மீதமிருக்கும் அனைத்து இடங்களும் கோவிலுக்கு சொந்தமானவை எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் எதன் அடிப்படையில் திருப்பரங்குன்ற மலையை சொந்தம் கொண்டாடுகின்றன? திரு. ஜோசப் விஜய் தலைமையிலான சிறுபான்மையின அரசு, எப்படியும் தங்களுக்கு ஆதரவாகத் தான் நிற்கும் என்ற ஆணவமா?

அல்லது முதலமைச்சருக்கு அரோகரா போட்ட தற்குறி தவெக அரசு, முருக பக்தர்களின் உரிமைகளை எளிதாக நமக்கு விட்டுக் கொடுத்து விடுவார்கள் என்ற அலட்சியமா? ‘மத நல்லிணக்கம்’ என்ற போர்வையில் மத மோதல்களை தூண்ட முயற்சிக்கிறதா தவெக அரசு?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

கார்த்திகை தீப நாள் நெருங்கி வரும் நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த தெளிவான முடிவுகள் எட்டப்படாமல் உள்ளது தொடர்ந்து பரபரப்பான சூழலை ஏற்படுத்தி வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !