நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள படம் ’சத்யவான் சாவித்திரி’. ஒரு கோர்ட் ட்ராமா கதைக்கருவில் உருவாகியுள்ள இந்த படத்தை ப்ரவீன்.எஸ்.விஜய் இயக்கியுள்ளார். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் நவம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். அப்போது அவர்களிடம் படம் குறித்த பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது மிஷ்கினிடம் கேள்வி கேட்டபோது அவர் கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் புகழ்ந்து பேசினார். அப்போது அவர் அடிக்கடி கீர்த்தி சுரேஷின் தொடை மீது கைவைத்து பேசினார். பின்னர் தலையைத் தொட்டு பேசினார். அதில் அவர் தொடுவதால் கீர்த்தி சுரேஷ் அசௌகரியமாக உணர்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Buy Now ! Pay Daily !
இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகியுள்ள நிலையில், வீடியோவும் வைரலாகி வருகிறது. அதை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில் ” முதலில், என் முகத்தில் உங்களுக்கு எங்கே சங்கடம் தெரிகிறது? தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பந்தம் போல எங்களுக்குள் ஒரு பிணைப்பு இருக்கிறது என்று அவரோ நானோ சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? இரண்டாவதாக, எனக்குச் சங்கடமாக இருந்தது என்று வைத்துக்கொண்டால், திரைப்படங்களில் எங்களைத் தொடுவார்கள் என்பதால் பொது இடங்களிலும் நான் அதனுடன் இயல்பாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? நீங்கள் சில விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் சகோதரா” என ஒருவரது கருத்துக்கு பதில் அளித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






